அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட ரூ.14.60 கோடி நிதி - அரசாணை வெளியீடு

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட ரூ.14.60 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.;

Update: 2025-01-05 04:19 GMT

சென்னை,

தமிழக சட்டசபையில் 2023-24-ம் ஆண்டு மானியக்கோரிக்கையின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, 'அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டுவிழா சிறப்பான முறையில் நடத்தப்படும்.

இதில், மாணவர்களின் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படுத்தித்தரப்படும். இதற்காக, சுமார் ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படும்' என அறிவித்தார்.

இந்த நிலையில், இந்த அறிவிப்பை செயல்படுத்திடும் வகையில், அரசு பள்ளிகளில் ஆண்டு விழாவை சிறப்பாக நடத்திட, பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ.14 கோடியே 60 லட்சத்து 89 ஆயிரம் ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. உரிய அறிவுரைகளை பின்பற்றி, பள்ளி ஆண்டுவிழாவை சிறப்பாக கொண்டாட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்