கருணாநிதியின் 3 அடி உயர வெண்கல சிலை - உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 3 அடி உயரமுள்ள வெண்கல சிலையை உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் நிலை குறித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை (புதன்கிழமை) ஆய்வு செய்கிறார். இதற்காக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் சென்னையில் இருந்து காரில் புறப்படுகிறார்.மாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்டத்தின் எல்லையான ஓங்கூர் மற்றும் திண்டிவனம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொன்முடி, தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் பொன்.கவுதமசிகாமணி ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதையடுத்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கிருந்து திருவெண்ணெய்நல்லூர் செல்கிறார். அங்கு மரகதம் கந்தசாமி மண்டபத்தின் முன்பு புதியதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 3 அடி உயரமுள்ள வெண்கல சிலையை திறந்து வைத்து பேசுகிறார்.அதன் பின்னர் விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறார்.