பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற ஐ.ஜி. க்கு பிடிவாரண்ட்

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. முருகனுக்கு சைதாப்பேட்டை கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

Update: 2024-11-22 18:44 GMT

சென்னை,

தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர் முருகன். இவர் ஐ.ஜி.யாக பணியாறி ஓய்வு பெற்றார். இவர் கடந்த 2017-18ம் ஆண்டில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார்.

இதனிடையே, அந்த அலுவலகத்தில் தனக்கு கீழ் பணியாற்றிய பெண் எஸ்.பி.க்கு முருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக குறச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி போலீசில் புகார் அளித்தார். மேலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சைதாப்பேட்டை 11வது மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு முன்னாள் ஐ.ஜி. முருகன் ஆஜராகவில்லை.

இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகத ஓய்வுபெற்ற ஐ.ஜி. முருகனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்