"அண்ணனின் பயணத்தில் எப்போதும் உடன் நிற்போம்" - திருமாவளவனுக்கு உதயநிதி வாழ்த்து

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-17 08:25 GMT

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், இன்று தனது 62-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருமாவளவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன் எம்.பி. அவர்களின் பிறந்த நாளான இன்று அவரை நேரில் வாழ்த்தி மகிழ்ந்தோம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 'மேஜர் ஜெனரல்' எனப் பாராட்டப்பட்டவர்.

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினின் அன்புக்குரிய உடன்பிறப்பு. சமத்துவம் - சமூகநீதி கோட்பாட்டின் அடிப்படையில் நம்மோடு கரம் கோர்த்து நிற்கும் அன்பு அண்ணன்.

பாசிஸ்ட்டுகளின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு இடந்தராமல், எல்லாத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய மானுட விடுதலைக்காக கொள்கை உரத்தோடுக் களமாடும் அண்ணனின் பயணத்தில் எப்போதும் உடன் நிற்போம். அவரின் பணிகள் சிறக்கட்டும்." என்று தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்