நெல்லையில் பைக் மீது லாரி மோதி விபத்து: குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு

நெல்லையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-09-17 06:18 GMT

நெல்லை

நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). இவருக்கு மனைவி மற்றும் மாரீஸ்வரி ( 12), சமீரா (7) என்ற 2 மகள்கள் உள்ளனர். கண்னன் இன்று காலை தனது 2 மகள்கள் மற்றும் மாமியார் ஆண்டாள் (67) ஆகியோரை மோட்டர் சைக்கிளில் அழைத்துக் கொண்டு நெல்லைக்கு சென்றார். நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் ரெயில்வே மேம்பாலம் அருகே வந்த போது, கண்ணன் ஓட்டி வந்த  பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பைக்கில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 4 பேரின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முன்னால் சென்ற லாரியை, பைக்கில் சென்றவர்கள் முந்திச் செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்