டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளை தாமதமின்றி வெளியிட நடவடிக்கை - எஸ்.கே.பிரபாகர் பேட்டி

புதிய டி.என்.பி.எஸ்.சி.தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் பதவியேற்றார்.

Update: 2024-08-23 20:27 GMT

சென்னை,

சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் புதிய டி.என்.பி.எஸ்.சி.தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்.கே.பிரபாகர் கூறியதாவது,

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் முறையாக நடத்தப்படும். தேர்வுக்கு பிறகு முடிவுகள் உடனடியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.அரசு பணிகளில் சேர வேண்டும் என்ற கனவோடு ஏராளமானவர்கள் அரசு தேர்வுகளை எழுதி வருகிறார்கள். அதற்கு அரசு பணியாளர் தேர்வாணையம் கால அட்டவணை தயாரித்து நடத்தி வருகிறது. .இந்த தேர்வுகளைத் தாண்டி மற்ற போட்டி தேர்வுகளையும் மாணவர்கள் எழுதுகிறார்கள். இரு தேர்வு தேதிகளும் ஒரே நாளில் இல்லாதவாறு பார்த்துக் கொள்வோம்.தேர்வுக்கும், தேர்வு முடிவுகளுக்கும் இருக்கும் இடைவெளியை நிச்சயம் குறைக்க நடவடிக்கை எடுப்போம். கால தாமதத்தை குறைப்பது தான் எங்களது முதல் பணி.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பெரிய புகார்கள் இல்லாமல் தரமான முறையில் அரசு தேர்வுகள் நடத்தி வருகிறது. இதை மேம்படுத்தும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்