இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலை
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில்(எஸ்ஐடிபிஐ) காலியாக உள்ள உதவி மேலாளர் கிரேடு 'ஏ'& 'பி' பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில்(எஸ்ஐடிபிஐ) காலியாக உள்ள 72 உதவி மேலாளர் கிரேடு 'ஏ'& 'பி' பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
காலியிடங்கள்: 72
பணி: உதவி மேலாளர் (Assistant Manager Grade 'A' & 'B' )
உதவி மேலாளர் கிரேடு 'ஏ' - பொது ஸ்ட்ரீம்-50
மேலாளர் கிரேடு 'பி' - ஜெனரல் ஸ்ட்ரீம்-10
மேலாளர் 'பி' - சட்டம்-6
மேலாளர் 'பி' - தகவல் தொழில்நுட்பம் (IT)- 6
சம்பளம் விவரம்:
உதவி மேலாளர் கிரேடு 'ஏ' - பொது ஸ்ட்ரீம்ரூ.44,500 – 89,100/-
மேலாளர் கிரேடு 'பி' - ஜெனரல் ஸ்ட்ரீம்-ரூ.55,200 – 99,700/-
மேலாளர் கிரேடு 'பி' - சட்டம்-ரூ.55,200 – 99,700/-
மேலாளர் கிரேடு 'பி' - தகவல் தொழில்நுட்பம் (IT)-ரூ.55,200 – 99,700/-
வயது வரம்பு:
உதவி மேலாளர் கிரேடு 'ஏ' - பொது ஸ்ட்ரீம்-21 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
மேலாளர் கிரேடு 'பி' - ஜெனரல் ஸ்ட்ரீம்-25 வயதுக்குக் குறையாமலும் 33 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
மேலாளர் கிரேடு 'பி' - சட்டம்- 25 வயதுக்குக் குறையாமலும் 33 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
மேலாளர் கிரேடு 'பி' - தகவல் தொழில்நுட்பம் (IT)- 25 வயதுக்குக் குறையாமலும் 33 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
எஸ்.சி./எஸ்.டி(SC/ ST): 5 ஆண்டுகள்
ஓபிசி(OBC): 3 ஆண்டுகள்
தேர்வு முறை:
முதல் கட்டம்-I: ஆன்லைன் தேர்வு (அனைத்து ஸ்ட்ரீம்/ கிரேடுகளுக்கும்)
இரண்டாம் கட்டம்: உதவி மேலாளர் கிரேடு 'ஏ' (பொது ஸ்ட்ரீம்) மற்றும் மேலாளர் கிரேடு 'பி' (பொது ஸ்ட்ரீம்)/ மேலாளர் கிரேடு 'பி' (சட்டம்) & மேலாளர் கிரேடு 'பி' (ஐடி)க்கான ஆன்லைன் தேர்வு
தகுதி: சம்பந்தப்பட்ட ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
எஸ்.சி./எஸ்.டி (ST/SC/EX-SERVICEMAN/PWD)- ரூ.175/-
ஓபிசி OBC(OTHERS)- ரூ.1100/-
விண்ணப்பிக்கும் முறை: https://www.sidbi.in/en/careers/careerdetails/sidbi-recruitment-officers-grade-a-b-general-specialist-2024 என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி-8.11.2024
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி-2.12.2024