பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?

காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-11-15 20:11 GMT

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

காலியிடங்கள்: 23 பணியிடங்கள்

பணி:

I.உதவி மேலாளர் (IT):

1. உதவி மேலாளர் (IT)- அப்ளிகேஷன் டெவலப்பர்: 2

2. உதவி மேலாளர்- சைபர் செக்கியூரிட்டி - 1

3. உதவி மேலாளர் (IT)- Open Source Application Developer: 1

II.உதவி மேலாளர் நிதி & கணக்குகள்-10

III. உதவி மேலாளர் -மனித வள மேலாண்மை-6

IV. உதவி மேலாளர் -பொருட்கள் மேலாண்மை-1

V.உதவி மேலாளர் தகவல் தொழில்நுட்பம்-1

VI.உதவி மேலாளர் சட்டம்-1

சம்பளம் விவரம்:ரூ.50,000-1,60,000.

வயது வரம்பு: 24.11.2024 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

எஸ்சி/எஸ்டி(SC/ST) - 5 ஆண்டுகள்

ஓபிசி(OBC) - 3 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்:

பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர். ரூ.600 செலுத்த வேண்டும்.

எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு தகவல் கட்டணமாக ரூ.200 மட்டும் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்கானல்

கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட துறைகளில் முதுநிலை பட்டம்/இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பக்கும் முறை:www.spmcil.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி-25.10.2024

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி-24.11.2024

.விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 25.10.2024 to 24.11.2024

Tags:    

மேலும் செய்திகள்