மத்தியஅரசு வேலை.. 16 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க 30-ம் தேதி கடைசி நாள்
லோயர் கிளார்க்,எம்டிஸ்,டெக்னிசியன்,தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனத்தில் லோயர்கிளார்க்,எம்டிஸ்,டெக்னிசியன்,தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
மொத்த காலியிடங்கள்: 16
லோயர் கிளார்க்-1,எம்டிஸ்-8,டெக்னிசியன்-3,தொழில்நுட்ப உதவியாளர்-4 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வி தகுதி:
எம்டிஸ்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
லோயர் கிளார்க்: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டெக்னிசியன்: 10 மற்றும் 12-ம் வகுப்பில் அறிவியல் பாட பிரிவில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தொழில்நுட்ப உதவியாளர்: பட்டபடிப்பில் அறிவியல் சார்ந்த பிரிவில் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு:
லோயர் கிளார்க்:18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
எம்டிஸ்:18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
டெக்னிசியன்:18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
தொழில்நுட்ப உதவியாளர்:21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
எம்டிஸ்:
PwBD (UR)- 10 ஆண்டுகள்
எஸ்.சி\எஸ்.டி- 5 ஆண்டுகள்
PwBD எஸ்.சி\எஸ்.டி:15 ஆண்டுகள்
முன்னாள் படைவீரர்கள் (பொது)இராணுவ சேவையிலிருந்து 03 வருடங்கள் கழித்து
லோயர் கிளார்க்:
PwBD (UR)- 10 ஆண்டுகள்
முன்னாள் படைவீரர்கள் (பொது)இராணுவ சேவையிலிருந்து 03 வருடங்கள் கழித்து
துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள்-5 ஆண்டுகள்
டெக்னிசியன்:
பொது (UR)- 10 ஆண்டுகள்
முன்னாள் படைவீரர்கள் (பொது)இராணுவ சேவையிலிருந்து 03 வருடங்கள் கழித்து
துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள்- வயது வரம்பு கிடையாது.
தொழில்நுட்ப உதவியாளர்:
PwBD (UR&EWS)- 10 ஆண்டுகள்
எஸ்.சி\எஸ்.டி- 5 ஆண்டுகள்
PwBD எஸ்.சி\எஸ்.டி:15 ஆண்டுகள்
முன்னாள் படைவீரர்கள் (பொது)(UR&EWS)இராணுவ சேவையிலிருந்து 03 வருடங்கள் கழித்து
முன்னாள் ராணுவத்தினர் (எஸ்.சி\எஸ்.டி)- 8 ஆண்டுகள்
துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள்-வயது வரம்பு கிடையாது.
தேர்வு முறை: எழுத்து தேர்வு/ஸ்கில் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்:
எம்டிஸ்: பொது பிரிவினர்,ஓபிசி,ஈடபிள்யூஎஸ் (UR) / OBC / EWS தேர்வு கட்டணம் ரூ.250,செயலாக்க கட்டணம் ரூ.250 செலுத்த வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர்,பெண்களுக்கு செயலாக்க கட்டணம் ரூ.250 மட்டும் செலுத்த வேண்டும்.
லோயர் கிளார்க்: பொது பிரிவினர்,ஓபிசி,ஈடபிள்யூஎஸ் (UR) / OBC / EWS தேர்வு கட்டணம் ரூ.500,செயலாக்க கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர்,பெண்களுக்கு செயலாக்க கட்டணம் ரூ.500 மட்டும் செலுத்த வேண்டும்.
டெக்னிசியன்: பொது பிரிவினர்,ஓபிசி,ஈடபிள்யூஎஸ் (UR) / OBC / EWS தேர்வு கட்டணம் ரூ.750,செயலாக்க கட்டணம் ரூ.750 செலுத்த வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர்,பெண்களுக்கு செயலாக்க கட்டணம் ரூ.750 மட்டும் செலுத்த வேண்டும்.
தொழில்நுட்ப உதவியாளர்: பொது பிரிவினர்,ஓபிசி,ஈடபிள்யூஎஸ் (UR) / OBC / EWS தேர்வு கட்டணம் ரூ.750,செயலாக்க கட்டணம் ரூ.750 செலுத்த வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர்,பெண்களுக்கு செயலாக்க கட்டணம் ரூ.750 மட்டும் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பிக்க தேதி ஆரம்பம்: 08 நவம்பர் 2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:30 நவம்பர் 2024
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ifgtb.icfre.gov.