முதலீடுகளின் மையமாக தமிழ்நாடு திகழ்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மழைபோல் பொழியும் முதலீடுகள் மாநிலத்தின் உந்துசக்தியாக உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-21 13:35 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

திராவிட மாடல் அரசின் கீழ் முதலீடுகளின் மையமாக தமிழ்நாடு திகழ்கிறது. மழைபோல் பொழியும் முதலீடுகள் மாநிலத்தின் உந்துசக்தியாக உள்ளது.

ரூ.17,616 கோடி முதலீடுகளுக்கான 19 தொழில் நிறுவனங்களின் திட்டங்களை தொடங்கி வைத்தேன். ரூ.51,157 கோடி மதிப்புள்ள 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினேன்.

இதன் மூலம் 1,06,803 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இது நமது இளைஞர்களுக்கு மகத்தான வாய்ப்புகளை வழங்குவதுடன் மாநிலம் முழுவதும் சமமான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்