சென்னை விமான நிலையத்தில் ரூ.7.58 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.7.58 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை,
சென்னை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய ரகசிய தகவலின்படி, சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய 10 பயணிகளிடம் இருந்து கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் தங்க செயின்கள் மற்றும் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை தங்கள் உடைமைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.7.58 கோடி மதிப்பிலான 12.095 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தங்கத்தை கடத்தி வந்த 10 பேரும் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.