முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நாகூர் ஹனிபா குடும்பத்தினர் சந்திப்பு

நாகூர் ஹனிபா குடும்பத்தினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்

Update: 2024-12-21 14:42 GMT

சென்னை,

நாகூர் ஹனிபா குடும்பத்தினர் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் தள பக்கத்தில்,

இசை முரசு நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,  அவர்கள், நாகப்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நாகூர் தைக்கால் தெருவிற்கு 'இசை முரசு நாகூர் E.M.ஹனிபா தெரு' என்றும், சிறுவர் விளையாட்டுப் பூங்காவிற்கு 'இசை முரசு நாகூர் E.M.ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா' என்றும் பெயர் சூட்டி சிறப்பு செய்தார்கள்.

இதனை முன்னிட்டு முதல்-அமைச்சர் அவர்களை, நாகூர் ஹனிபா அவர்களின் குடும்பத்தினருடன் தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றிகள் தெரிவித்துக்கொண்டோம் . என தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்