விஷ சாராயம் விவகாரம்- மதிமுக எம்.பி துரை வைகோ நேரில் ஆறுதல்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மதிமுக எம்.பி. துரை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்

Update: 2024-06-20 16:54 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் விஷ சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 35 ஆக அதிகரித்தது. இன்று பிற்பகல் மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மதிமுக எம்.பி. துரை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து துரை வைகோ மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்