செய்திகள் சில வரிகளில்......

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

Update: 2024-08-29 11:55 GMT

சென்னை,

* அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்த முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

* நாட்டுக்காக விளையாடிய அனைவருக்கும் பாராட்டுகள் என தேசிய விளையாட்டு தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

* நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக ஒரு மணி நேரத்திற்கு 43 குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

* குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறவேண்டிய நடிகர் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்தது கோழைத்தனம் என நடிகை பார்வதி திருவோத்து தெரிவித்துள்ளார்.

* முகேஷ் எம்.எல்.ஏ. பதவியில் நீடிப்பதற்கு சட்டரீதியாக எந்த தகுதியும் இல்லை என ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.

* ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

* இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

* ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்று முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி அறிவித்துள்ளார்.

* சட்ட விரோத செயல்களை அனுமதித்த குற்றச்சாட்டில் கைதான டெலிகிராம் நிறுவன சி.இ.ஓ. பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

* ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் அஸ்வின் 870 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்