கவரப்பேட்டை ரெயில் விபத்து - மேலும் 10 பேருக்கு சம்மன்

கவரப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக மேலும் 10 பேருக்கு ரெயில்வே போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Update: 2024-10-14 08:04 GMT

கோப்புப்படம்

திருவள்ளூர்,

மைசூருவில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 11-ம் தேதி இரவு திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட், உதவி லோகோ பைலட் உள்ளிட்ட 16 பேருக்கு ரெயில்வே துறை சார்பில் ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து கவரப்பேட்டையில் விபத்து நடந்த பகுதியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், விபத்து நடந்த இடத்தில் தண்டவாளத்தில் உள்ள போல்ட்டுகள் மற்றும் பிராக்கெட்டுகள் கழற்றப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில் கவரப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக மேலும் 10 பேருக்கு ரெயில்வே போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சிக்னல், என்ஜினியர் துறையைச் சேர்ந்த 10 பேர் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்