தமிழகத்தில் எத்தனை குளிர்பதன கிடங்குகள் உள்ளன? - வெளியான தகவல்

குளிர்பதன கிடங்கு உள்ள விவரங்களை மத்திய அரசின் தரவு தளம் வெளியிட்டுள்ளது.;

Update: 2025-01-02 11:43 GMT

சென்னை,

அறுவடைக்கு பின்னர் பழங்கள், காய்கறியை சேமித்து வைத்துக்கொண்டு, உரிய நேரத்தில் விநியோகம் செய்ய எடுத்து செல்வதற்காக குளிர்பதன கிடங்கு அமைப்பதற்கு உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் மானியம் வழங்கி வருகிறது. அதன்படி, கடந்த மே மாதம் வரையிலான நிலவரப்படி மாநிலங்கள் வாரியாக குளிர்பதன கிடங்கு உள்ள விவரங்களை மத்திய அரசின் தரவு தளம் வெளியிட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 2 ஆயிரத்து 481 குளிர்பதன கிடங்குகள் உள்ளன. இதற்கு அடுத்தப்படியாக குஜராத்தில் 1,023, பஞ்சாபில் 770, மராட்டியத்தில் 655, மேற்கு வங்காளத்தில் 517 குளிர்பதன கிடங்குகள் உள்ளன. தமிழகத்தை பொறுத்தமட்டில் 188 குளிர்பதன கிடங்குகள் உள்ளன. லட்சத்தீவில் மிகவும் குறைவாக ஒரே ஒரு குளிர்பதன கிடங்கு மட்டுமே உள்ளது.

இதேபோல சிக்கிம், மணிப்பூர், அருணாசலபிரதேசத்தில் தலா 2, மிசோரமில் 3, புதுச்சேரி, மேகாலயா, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தலா 4 குளிர்பதன கிடங்குகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த குளிர்பதன கிடங்குகளில் இருந்துதான் பொருட்கள் குறைந்த தட்ப வெப்பநிலையில் சேமிக்கப்பட்டு, பின்னர் விநியோக சங்கிலிக்கு எடுத்து செல்லப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்