பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கான அனுமதி நேரம் நீட்டிப்பு

தென்காசியில் உள்ள பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-03 14:16 GMT

கோப்புப்படம்

தென்காசி,

தென்காசி மாவட்டத்தின் பிரபல சுற்றுலா தலமாக குற்றால அருவிகள் உள்ளன. தமிழக்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வார விடுமுறை, தொடர் விடுமுறை போன்ற நாட்களில் குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள்.

இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும் சமயங்களில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, குளிக்க தடை விதிக்கப்படுவதும், நீர்வரத்து சீரானதும் குளிக்க அனுமதிக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்ட துவங்கி உள்ளது. 

இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் பழைய குற்றால அருவியில் குளிக்க காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் ஆட்டோக்கள் பிரதான வாயில் வரை செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்