தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்; தீர்மானம் நிறைவேற்றம்

தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.;

Update:2025-03-22 06:28 IST
தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்; தீர்மானம் நிறைவேற்றம்


Live Updates
2025-03-22 08:03 GMT

ஐதராபாத்தில் அடுத்த கூட்டம்

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அடுத்த கூட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்றும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2025-03-22 08:03 GMT

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டம் நிறைவு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டம் நிறைவடைந்துள்ளது. 3 மணிநேரம் நடைபெற்ற கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

2025-03-22 07:52 GMT

தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்; தீர்மானம் நிறைவேற்றம்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டுக்குழு கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 3 மாநில முதல்-மந்திரிகள், பல்வேறு மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டுக்குழு கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தீர்மானம் ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டுள்ளது. 

2025-03-22 07:42 GMT

 7 மாநிலங்கள் 44 தொகுதிகளை இழக்க நேரிடும்; துணை முதல்-மந்திரி உதயநிதி ஸ்டாலின்

தற்போதைய கணக்கெடுப்புப்படி தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தொகுதிகளை இழக்கும் நிலை ஏற்படும். குறிப்பாக, தென் இந்தியாவின் தொகுதிகள் 30 சதவீதம் என்பதிலிருந்து 20 சதவீதம் என குறையும் அபாயம் உள்ளது. 7 மாநிலங்கள் 44 தொகுதிகளை இழக்க நேரிடும்.

1973ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப்படியே தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். மக்களவை தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால் நமக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்றார். 

2025-03-22 07:20 GMT

தொகுதி மறுசீரமைப்பு என்பது அநீதி மட்டுமல்ல துரோகம்; டி.கே. சிவக்குமார்

கூட்டாட்சி ஜனநாயகம் எனும் கட்டடத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவி சிதைக்கின்றனர். தொகுதி மறுசீரமைப்பு என்பது அநீதி மட்டுமல்ல துரோகம். ஜனநாயகம் காக்க அனைவரும் இங்கு ஒன்றுகூடியுள்ளோம். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சித்தராமையா கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக இந்த கூட்டம் உள்ளது என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் கூறினார்

2025-03-22 07:15 GMT

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக்குழு கூட்டத்தில் பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் காணொலி வாயிலாக பேசினார். அவர் பேசியதாவது, மக்கள் தொகையை கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றிய மாநிலங்களை தண்டிக்கக் கூடாது’ என்றார்.

2025-03-22 06:01 GMT

 பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை. நினைப்பதை முடிவாக எடுக்கின்றனர். கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே தொகுதி மறுசீரமைப்பு என்று தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

2025-03-22 05:40 GMT

மாநில உரிமைகளை பா.ஜ.க. பறிக்கிறது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாநில உரிமைகளை பறிக்கும் கட்சியாக பா.ஜ.க. எப்போதும் இருந்து வருகிறது. மாநில உரிமையை நிலைநாட்டிட தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

2025-03-22 05:29 GMT

தொகுதி மறுசீரமைப்பால் நமது பண்பாடு , அடையாளம், முன்னேற்றம், சமூகநீதி ஆபத்தை சந்திக்கிறது. எப்போதும் மாநிலங்களை ஒடுக்கும் கட்சி பாஜக. சொந்த நாட்டில் நாமே அரசியல் அதிகாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு 6 முதல் 10 நாடாளுமன்ற தொகுதிகளை இழக்க நெரிடும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்