மத்திய, மாநில அரசுகள் கைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கைத்தறி தொழிலை பாதுகாத்து, கைத்தறி நெசவாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் முன்னேற்றவேண்டும்.

Update: 2024-09-13 22:45 GMT

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டோர் நெசவுத்தொழிலை நம்பி வாழ்கிறார்கள். உயர்மதிப்பு மிக்க பட்டுப்புடவைகள், பட்டு வேட்டிகள், பட்டு துண்டுகள் ஆகியவை கைத்தறி நெசவு 'லூம்'களில் மட்டுமே நெய்திட 1985 கைத்தறி சட்டம் வகை செய்துள்ளது. கைத்தறியில் தயாரிக்கக்கூடிய பட்டு வஸ்திரங்கள் விசைத்தறி மூலம் தயாரிப்பதால் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

விவசாயத்திற்கு அடுத்தப்படியாக உள்ள கைத்தறி தொழில் பாதிக்கப்பட்டால் இந்தியாவின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் உரிய பட்டு கைத்தறி தொழில் நலிவடைந்து போகும். இதனால் கைத்தறி தொழிலும், கைத்தறி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளனர். இந்த சூழலில் கைத்தறி தொழிலில் ஈடுபட நெசவு செய்யும் தொழிலாளர்கள் வரத் தயங்குகிறார்கள்.எனவே மத்திய-மாநில அரசுகள் கைத்தறி தொழிலில் ஈடுபடும் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று, கைத்தறி தொழிலை பாதுகாத்து, கைத்தறி நெசவாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் முன்னேற்றவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்