செல்போன் வெடித்து இளைஞர் உயிரிழப்பு

மதுரையில் இருந்து பரமக்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர்.

Update: 2024-07-21 14:29 GMT

மதுரை,

இரவு நேரத்தில் செல்போன்களை பயன்படுத்திவிட்டு தூங்கபோகும் முன்பு படுக்கையில் சார்ஜ் போட்டுவிட்டு உறங்குவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், செல்போன் வெடித்து விபத்து நிகழ்கிறது. அதேபோல் ஜார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பேசும் போது வெடித்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அவ்வப்போது ஏற்படுகிறது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் இருந்து பரமக்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரஜினி (வயது 36) என்பவர் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது. இதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் சென்ற மற்றொரு இளைஞர் படுகாயமடைந்தார்.இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்