மெரினா கலங்கரை விளக்கத்தில் சக்திவாய்ந்த புதிய ரேடார் கருவி பொருத்தம்

சென்னை மெரினா கலங்கரை விளக்கத்தில் ரேடார் கருவி, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Update: 2024-12-22 05:49 GMT

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தில் சக்திவாய்ந்த ரேடார் கருவி, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரேடார் கருவி கலங்கரை விளக்கத்தின் 11வது மாடியில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரேடார் கருவி மூலம் 150 கிலோ மீட்டர் தொலைவில் வரும் கப்பல்கள் மற்றும் படகுகளை கூட துல்லியமாக கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது.

இந்த ரேடார் கடலோர பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரேடாரின் ஸ்கேன் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை, கலங்கரை விளக்க அதிகாரிகள் உடனுக்குடன் கடலோர காவல்படைக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் சென்னைக்கு வந்து செல்லும் கப்பல்கள், மீன்பிடி படகுகள் உள்ளிட்டவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ரேடார் கருவி ஸ்கேன் செய்யும் பணிகளையும், அதில் உள்ள கேமரா புகைப்படம் எடுக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. இதில் வரும் கதிர்வீச்சு தாக்கம் காரணமாக 10வது மாடி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து புதிய ரேடார் கருவி கொண்டுவரப்பட்டு, 40 அடி உயரம் உள்ள கலங்கரை விளக்கத்தில் 60 அடி உயரம் கொண்ட கிரேன் இந்திரம் மூலம் புதிய ரேடார் கருவி பொருத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்