கொப்பரை ஆதார விலையை உயர்த்திய பிரதமருக்கு நன்றி - அண்ணாமலை
கொப்பரை ஆதார விலையை உயர்த்தி வழங்கியிருப்பது விவசாயிகளுக்குச் சிறந்த வருமானத்தை உறுதி செய்யும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை ,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
வரும் 2025 ஆம் ஆண்டு பயிர் பருவத்தில், அரவைக் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, ஒரு குவிண்டாலுக்கு ரூ.11,582 ஆகவும், பந்து கொப்பரை ஒரு குவிண்டாலுக்கு ரூ.12,100 ஆகவும் உயர்த்தி வழங்கியதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பாஜக மற்றும் தமிழக தென்னை விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாட்டில் 25.7% தென்னை உற்பத்தியாளர்கள் தமிழகத்தில் உள்ள நிலையில், குறைந்தபட்சஆதார விலையை உயர்த்தி வழங்கியிருப்பது, தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்குச் சிறந்த வருமானத்தையும் உறுதி செய்யும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.