மின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.10 லட்சமாக உயர்வு
மின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை,
பொது இடங்களில் மின் விபத்துகளால் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு மின்சார வாரியம் வழங்கும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
முழு பார்வை பாதிப்பு, 2 கை, கால்களும் செயலிழந்தால் வழங்கப்படும் நிவாரணம் ரூ.3 லட்சமாகவும், ஒரு கை, கால் செயலிழப்புக்கு நிவாரணம் ரூ.1.50 லட்சமாகவும் உயர்த்தி மின்சார வாரியம் அரசாணை வெளியிட்டுள்ளது.