தெருக்குழாயில் தண்ணீர் பிடித்த போது கார் மோதி 3 பெண்கள் பலி- தூத்துக்குடியில் சோகம்

சாலையோர தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த 4 பெண்கள் மீது கார் மோதியது.

Update: 2024-06-23 05:27 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்த தர்மராஜன் என்பவரது மகன் மணிகண்டன். இவர் தனது நண்பர்களுடன் பெங்களூருவில் இருந்து நாலுமாவடிக்கு காரில் வந்துகொண்டிருந்தார். காரில் அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது முக்காணியில் சாலையோர தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த 4 பெண்கள் மீது கார் மோதியது. இதில் நால்வரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் சாந்தி, அமராவதி, பார்வதி ஆகிய 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சண்முகத்தாய் என்பவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய மணிகண்டனை போலீசார் கைதுசெய்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது. கார் மோதி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Tags:    

மேலும் செய்திகள்