நடுரோட்டில் கொலை செய்வதுபோல் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்த வாலிபர்கள் கைது

நடுரோட்டில் கொலை செய்வதுபோல் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update:2025-03-19 15:54 IST
நடுரோட்டில் கொலை செய்வதுபோல் ரீல்ஸ் வீடியோ எடுத்த வாலிபர்கள் கைது

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் உமனாபாத் பகுதியில் வாலிபர் ஒருவரை மற்றொரு வாலிபர் சுத்தியலால் தாக்கி கொலை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பானது. இதுகுறித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொலை எதுவும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும், வாலிபர்கள் 2 பேரும் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்து வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து உமனாபாத் போலீசார் வீடியோ ஆதாரங்களின் பேரில் 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் கலபுரகி புறநகர் பகுதியை சேர்ந்த சச்சின் (வயது 30), சாய்பன்னா (32) என்பது தெரியவந்தது.

சச்சின் மீது சாய்பன்னா அமர்ந்து சுத்தியலால் தாக்கி கொலை செய்வது போன்று வீடியோ எடுத்து வெளியிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்