அசாமில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது

அசாமில் ரூ.1 கோடி மதிப்பிளான போதைப்பொருள் கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-03-21 14:34 IST
அசாமில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது

திஸ்பூர்,

அசாம் மாநிலம் நாகோன் மாவட்ட போலீசாருக்கு போதைப்பொருள் குறித்து ரகசிய தகவல கிடைந்தது. இதன் அடிப்படையில் கெரேகு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு வாகனத்தில் போலீசார் சோதனை செய்தனர்.

அதில் போதைப்பொருளை வாகனத்தில் மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். வாகனத்தில் இருந்த 461 கிராம் ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதனை கடத்தி வந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வெற்றிகரமான நடவடிக்கைக்கு காவல்துறையினருக்கு அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்