இணையவழி குற்றங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் தளம் வாட்ஸ்அப் - உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை

இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோர் தங்களின் குற்றச்செயல்களுக்கு கூகுள் சேவைத்தளங்களையே பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-01-01 10:30 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

கடந்த 2024-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், வாட்ஸ்அப் மூலம் இணைய மோசடிகள் தொடர்பாக மொத்தம் 43,797 புகார்களும், டெலிகிராமுக்கு எதிராக 22,680 புகார்களும், இன்ஸ்டாகிராமுக்கு எதிராக 19,800 புகார்களும் வந்துள்ளன.

இது தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இணைய மோசடிகளில் அதிகம் ஈடுபடுபவர்கள் தங்களின் குற்றச்செயல்களுக்கு கூகுள் சேவைத்தளங்களையே பயன்படுத்துகின்றனர். வேலையில்லா இளைஞர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள் மற்றும் தேவை உள்ள மக்களே இக்குற்றங்களுக்கான இலக்குகள். இவர்களே அதிக அளவிலான பணத்தினை இழக்கின்றனர்.

நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கடன் பயன்பாடு போன்ற செயலிகளுக்கான செயல்களின் சமிக்கைகள், கூகுளின் சைபர் டொமைன்களை இணைய குற்றவாளிகள் தவறாக பயன்படுத்துதல், ஆண்ட்ராய்டு பேங்கிங் மால்வர் போன்றவை குறித்து பகிர்ந்து கொள்வதற்கு I4சி கூகுள் மற்றும் பேஸ்புக்குடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்தியாவில், கட்டமைக்கப்பட்ட இணையவழி குற்ற நடவடிக்கையான சட்டவிரோத கடன் செயலிகள் தொடங்குவதற்கு நிதியுதவி அளிக்கப்படும் பேஸ்புக் விளம்பரங்கள் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இத்தகைய இணைப்புகள் முன்கூட்டியே அடையாளம் காணப்பட்டு, தேவையான நடவடிக்கைக்காக பேஸ்புக் மற்றும் பேஸ்புக் பக்கத்துடன் பகிரப்படுகின்றன. சட்ட அமலாக்கத்துறைகள், தடயவியல் ஆய்வாளர்கள், இணைய பாதுகாப்பில் பயிற்சி அளிப்பதற்காக வழக்கறிஞர்கள், நீதிபதிகள், சைபர் குற்றங்களை விசாரிக்கும் அமைப்புகள், நாடுமுழுவதிலும் உள்ள டிஜிட்டல் தடயவியல் நிறுவனங்கள் என குற்றவியல் நீதி அமைப்பின் அனைத்து அங்கங்களின் திறன்களை வளர்ப்பதற்கான முயற்சிகளை I4சி மேற்கொள்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்