'காங்கிரஸ் கட்சி செய்த தவறுகளை நாம் செய்யக் கூடாது' - நிதின் கட்கரி

காங்கிரஸ் கட்சி செய்த தவறுகளை நாம் செய்யக் கூடாது என மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-14 09:29 GMT

பனாஜி,

கோவா மாநில பா.ஜ.க. செயற்குழு கூட்டம் பனாஜி அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"காங்கிரஸ் கட்சி தவறுகள் செய்ததால்தான் மக்கள் பா.ஜ.க.வை தேர்வு செய்துள்ளனர். காங்கிரஸ் செய்த தவறுகளை நாமும் செய்தால் பிறகு அக்கட்சி ஆட்சியில் இருந்து வெளியேறியதற்கும் நாம் ஆட்சிக்கு வந்ததற்கும் எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும்.

பா.ஜ.க. ஒரு வித்தியாசமான கட்சி என்று அத்வானி கூறுவார். மற்ற கட்சிகளில் இருந்து நாம் எவ்வாறு மாறுபட்டுள்ளோம் என்பதை கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும்.

மராட்டிய மாநிலத்தில் சாதி அடிப்படையில் அரசியல் செய்யும் போக்கு உள்ளது. இந்தப் போக்கை பின்பற்ற வேண்டாம் என்று நான் முடிவு செய்துள்ளேன். சாதி அரசியலில் ஈடுபடமாட்டேன் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளேன். சாதி பற்றி பேசுவோருக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்பது நிச்சயம்."

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்