ஜம்மு காஷ்மீரில் உள்ள சாலையில் கண்ணி வெடிகுண்டு கண்டெடுப்பு
ஜம்மு-காஷ்மீரில் உள்ள மஹோர்-குலாப்கர் சாலையில் கண்ணி வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.;
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் ரியாசி பகுதியில் உள்ள மஹோர்-குலாப்கர் சாலையில் பாதுகாப்புப்படையினர் சந்தேகத்திற்கிடமான கண்ணி வெடிகுண்டு சாதனத்தை கண்டுபிடித்து செயலிழக்க செய்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரியாசி பகுதியில் உள்ள அங்கராலா அருகே உள்ள மஹோர்-குலாப்கர் சாலையில் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாலையோரம் சந்தேகத்திற்கிடமான கண்ணி வெடிகுண்டு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர் அந்த வெடிகுண்டை எந்த சேதமும் ஏற்படாமல் செயலிழக்க செய்தனர். மேலும் சில வெடிகுண்டுகள் அப்பகுதியில் இருக்கக்கூடும் என சந்தேகத்தால் அங்கு பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.