'21-ம் நூற்றாண்டு இந்தியாவிற்கானது' - பிரதமர் மோடி

21-ம் நூற்றாண்டு என்பது இந்தியாவிற்கான நூற்றாண்டு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-06 16:40 GMT

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெறும் 'அஷ்டலட்சுமி மகோத்சவ்' நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

"பாரத் மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெறும் மகோத்சவ் நிகழ்ச்சி, வடகிழக்கு மாநிலங்களின் சக்தியை நாட்டிற்கும், உலகிற்கும் எடுத்துரைக்கும். இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாநிலங்களின் பல்வேறு வண்ணங்கள், இன்று நாட்டின் தலைநகரில் அழகிய வானவில்லாக உருவாகி இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களின் ஆன்மா இன்று டெல்லியில் நிறைந்துள்ளது.

தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவின் அளவற்ற ஆற்றலுக்கான வாயிலாக வடகிழக்கு மாநிலங்கள் திகழ்கின்றன. எதிர்காலம் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு சொந்தமானது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். கடந்த காலங்களில் மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை, அகமகதாபாத் மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. இனி வருங்காலத்தில் அகர்தலா, இம்பால், சில்லாங், ஐசால் மற்றும் இடாநகர் ஆகிய நகரங்கள் எழுச்சி பெறும்.

அதற்கு 'அஷ்டலட்சுமி மகோத்சவ்' போன்ற நிகழ்ச்சிகள் உறுதுணையாக இருக்கும். 21-ம் நூற்றாண்டு என்பது இந்தியாவிற்கான நூற்றாண்டாக விளங்கும். அதில் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்