மேற்கு வங்காளம்: குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து
கொல்கத்தாவின் துர்காபூர் பாலம் அருகே உள்ள நியூ பகுதியில் குடிசைப் பகுதியில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவின் துர்காபூர் பாலம் அருகே உள்ள நியூ பகுதியில் குடிசைப் பகுதியில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு 18 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து சென்ற வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் 100-க்கும் மேலான குடிசைகள் எரிந்து நாசமாயின. மேலும் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.