ராமர் கோவிலை கட்டியதால் மட்டும் ஒருவர் இந்துக்களின் தலைவராக முடியாது; மோகன் பகவத்
ராமர் கோவிலை கட்டியதால் மட்டும் ஒருவர் இந்துக்களின் தலைவராக முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் விஷ்வகுரு பாரதம் என்ற தலைப்பில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, மதம் பழமையானது. மதத்தின் அடையாளமாக ராமர் கோவில் உருவாக்கப்பட்டது. அது சரிதான். ஆனால், ராமர் கோவிலை கட்டியதால் மட்டும் ஒருவர் இந்துக்களின் தலைவர் ஆகிவிட முடியாது.
தன்னை வெளிப்படுத்தாமல் தொடர்ந்து சேவை செய்பவர்கள் சேவை பெற தகுதியானவர்கள். மத சேவையை தொடர்ந்து செய்துகொண்டிருக்கும்போது நாம் தீவிரமாகவும், நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்பட மையப்பாதையையும் தேர்ந்தெடுக்கக்கூடாது' என்றார்.