காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: 5 வீரர்கள் வீர மரணம்

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.;

Update: 2024-10-24 16:51 GMT

ஜம்மு காஷ்மீர்,

காஷ்மீரில் கந்தர்பல் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொழிலாளி ஒருவர் காயமடைந்தார். அவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரிதம் சிங் என தெரியவந்தது. இதனையடுத்து, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், குல்மார்க் பகுதியில் உள்ள போடாபதேர் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

கடந்த 3 நாட்களுக்கு முன்னர், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிமாநிலத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்