டெல்லியில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வீடு புகுந்து குத்திக்கொலை
டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வீடு புகுந்து குத்திக்கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லி நெப் சாராய் பகுதியை சேர்ந்த ராஜேஷ்(53), அவரது மனைவி கோமல்(47) மற்றும் மகள் கவிதா(23) ஆகிய மூன்று பேரையும் இன்று அதிகாலை மர்ம நபர்கள் வீடு புகுந்து படுகொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தின்போது ராஜேஷின் மகன் நடைபயிற்சி செய்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது தனது குடும்பத்தினர் அனைவரும் படுகொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களின் உடல்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.