புதுச்சேரியில் நாளை 17 பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் நாளை 17 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-04 13:40 GMT

புதுச்சேரி,

வங்கக்கடலில் உருவான பெஞ்ஜல் புயல் காரணமாக புதுச்சேரியில் முன்எப்போதும் இல்லாத வகையில் 54 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதில் நகரம் உள்பட புறநகர் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால் பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருகிறது. அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் நிவாரண முகாம்களாக செயல்படும் 17 பள்ளிகளுக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கபபட்டுள்ளது. ஏனைய அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை வழக்கம்போல் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

17 பள்ளிகள் விவரம்:-

 

Tags:    

மேலும் செய்திகள்