ஒடிசாவில் கடற்படை ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் நெல் வயலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.;

Update:2024-12-04 20:28 IST

பரிபாடா,

இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் ரசகோவிந்தாபூர் தொகுதிக்குட்பட்ட அமராடா கிராமத்தில் உள்ள நெல்வயலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் கூறுகையில்;

ராஸ்கோவிந்த்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அர்மடா கிராமத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதால் அங்கு வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஹெலிகாப்டர் தரையிறங்கியதும் அதிலிருந்து வெளியே வந்த விமானி அதை ஆய்வு செய்தார். பின்னர் 30-40 நிமிடங்களுக்குப் பிறகு ஹெலிகாப்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக கூறினார்.

சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் அங்கு தரையிறக்கப்பட்டதாகவும், அதை விமானியே சரிசெய்ததாகவும் போலீஸ் சூப்பிரண்டு வருண் குண்டுபள்ளி தெரிவித்திருந்தார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடற்படை ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அமராடா பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்