14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 55 வயது டெய்லர் - அதிர்ச்சி சம்பவம்
14 வயது சிறுமியை, 55 வயது டெய்லர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் தசரதபூர் கிராமத்தை சேர்ந்த பெண்ணின் 14 வயது மகளுக்கு கடந்த சில நாட்களாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுமியை தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் இது குறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது, தசரபூர் கிராமத்தை சேர்ந்த 55 வயதான டெய்லர் தன்னை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியுள்ளார்.
இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள டெய்லரை தீவிரமாக தேடி வருகின்றனர்.