அசாமில் குடியுரிமை சட்டப்பிரிவு 6ஏ செல்லும்: சுப்ரீம் கோர்ட்டு

அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட இந்திய குடியுரிமை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Update: 2024-10-17 08:34 GMT

File image

புதுடெல்லி,

ஜனவரி 1, 1966 முதல் மார்ச் 25, 1971-க்கு இடையில் வங்கதேசத்திலிருந்து அசாமுக்கு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக 1985ம் ஆண்டில் அசாம் ஒப்பந்தத்தில் குடியுரிமை சட்டப்பிரிவு 6ஏ இணைக்கப்பட்டது.

இந்நிலையில், அசாம் குடியேற்றத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் குடியுரிமை சட்டம் 1955ன் பிரிவு 6ஏ-வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அதனை விசாரித்த நீதிபதிகள், குடியுரிமை சட்டத்தின் 6ஏ பிரிவு செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளனர். தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சூர்யா காந்த், சுந்த்ரேஷ், பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 4:1 என்ற பெரும்பான்மையில் இந்த சட்டப்பிரிவை உறுதி செய்தது. இவர்களில் நீதிபதி பர்திவாலா மட்டும் குடியுரிமை சட்டத்திற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்