கர்நாடகா முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா (92) இன்று காலமானார்.

Update: 2024-12-10 01:28 GMT

பெங்களூரு,

உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்த கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா (92) (சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா) பெங்களூருவில் இன்று காலமானார். அதிகாலை சுமார் 3 மணி அளவில், அவரது உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1999 முதல் 2004-ம் ஆண்டு வரை கர்நாடகா முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் எஸ்.எம். கிருஷ்ணா. இதனைத்தொடர்ந்து 2004 முதல் 2008 ம் ஆண்டு வரை மராட்டிய மாநிலத்தின் கவர்னராவும் , 2009 முதல் 2012-ம் ஆண்டு வரை வெளியுறவுத்துறை மந்திரியாவும் பதவி வகித்தவர் எஸ்.எம். கிருஷ்ணா.

முன்னதாக கடந்த 1989 முதல் 1993 வரை கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராகவும், 1971 முதல் 2014ம் ஆண்டு வரை பல முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார் எஸ்.எம். கிருஷ்ணா.

கடந்த ஆண்டு, அவரது ஆறு தசாப்த கால அரசியல் வாழ்க்கையை அங்கீகரிக்கும் வகையில், இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்