இந்தியாவை கண்டு உலக நாடுகள் வியக்கின்றன - பிரதமர் மோடி

சுதந்திரத்துக்கு பின்பு அமைந்த அரசுகள், வளர்ச்சிக்கோ, கலாசாரத்துக்கோ முன்னுரிமை அளிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2024-12-09 23:16 GMT

ஜெய்ப்பூர்,

ராஜதான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு தொடங்கியது. 11-ந்தேதிவரை மாநாடு நடக்கிறது. 32 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், அதானி குழும தலைவர் கவுதம் அதானி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொழில் அதிபர்கள், தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத் தார். அவர் பேசியதாவது:-

சுதந்திரத்துக்கு பின்பு அமைந்த அரசுகள், வளர்ச்சிக்கோ, கலாசாரத்துக்கோ முன்னுரிமை அளிக்கவில்லை. அதனால் ராஜஸ்தான் பாதிக்கப்பட்டது. இன்று, 'வளர்ச்சியும், கலாசாரமும்' என்ற மந்திரத்தை அரசு பின்பற்றுகிறது. அதனால் ராஜஸ்தான் பலன் அடைந்துள்ளது.

இந்தியா தனது ஜனநாயகம், மக்கள்தொகை, தரவு ஆகியவற்றின் உண்மையான வலிமையை உலகத்துக்கு காட்டிக்கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஜனநாயகம் வலிமையாக மாறியிருக்கிறது என்ற உண்மை, இந்தியாவுக்கு பெரிய சாதனை.

நடப்பு நூற்றாண்டு, தொழில்நுட்பம் மற்றும் தரவுகளால் உந்தப்பட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஜனநாயகமயமாக்கல் எப்படி ஒவ்வொரு துறைக்கும் பலன் அளிக்கிறது என்பதை இந்தியா காட்டி இருக்கிறது.

'சீர்திருத்தம்-செயல்திறன்-மாற்றம்' என்ற மந்திரம் மூலம் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. அந்த வளர்ச்சி, ஒவ்வொரு துறையிலும் தெரிகிறது. இதை உலகின் ஒவ்வொரு முதலீட்டாளரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். இந்தியாவை கண்டு உலக நாடுகள் வியக்கின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்