குடியரசு தின அணிவகுப்பு: தமிழக ஊர்திக்கு அனுமதி இல்லை

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

Update: 2024-12-22 15:59 GMT

புதுடெல்லி,

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தலைநகர் டெல்லியில் மாநில அரசுகளின் சார்பில் அனுப்பப்படும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதன்படி, 2025 குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்குபெற 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அணிவகுப்பு நிகழ்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் டெல்லியின் அலங்கார ஊர்திக்கும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை. இது பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியல் என டெல்லி முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். டெல்லியின் அலங்கார ஊர்திக்கு தொடர்ந்து 4-வது ஆண்டாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்