சோனியா காந்தியின் தனிச் செயலாளர் மறைவு: ராகுல் காந்தி நேரில் அஞ்சலி

திருச்சூரில் வைப்பட்டுள்ள சோனியா காந்தியின் தனிச் செயலாளர் உடலுக்கு மக்களவை எதிரிக்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்.;

Update: 2024-12-17 07:49 GMT

திருவனந்தபுரம்,

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் நீண்டகால தனிச் செயலாளரான பி.பி.மாதவன் மாரடைப்பு காரணமாக நேற்று டெல்லியில் காலமானார். இதையடுத்து மாதவனின் உடல் அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் திருச்சூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், திருச்சூரில் வைப்பட்டுள்ள மாதவனின் உடலுக்கு மக்களவை எதிரிக்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார். திருச்சூர் மாவட்டத்தில் உள்ள செருசேரி கிராமத்தில் உள்ள மாதவனின் இல்லத்திற்கு இன்று காலை 9 மணியளவில் வந்த ராகுல் காந்தி அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். ராகுல் காந்தியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இவர்களை தொடர்ந்து மாதவனின் உடலுக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்