டெல்லியை நோக்கி பேரணி செல்ல முயன்ற பஞ்சாப் விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

டெல்லியை நோக்கி பேரணி செல்ல முயன்ற பஞ்சாப் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Update: 2024-12-06 10:08 GMT

சண்டிகர்,

வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 101 விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக செல்லும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்படி ஷம்பு எல்லையில் இருந்து அவர்கள் தங்கள் பேரணியை தொடங்கினர்.

இந்நிலையில், பேரணி தொடங்கிய சிறிது நேரத்தில் விவசாயிகளை அரியானா போலீசார் தடுத்து நிறுத்தினர். முன்னதாக போராட்டம் நடத்துவதற்கு அம்பாலா மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்த நிலையில், பேரணி நடத்திய விவசாயிகளிடம் போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் வலியுறுத்தினர். மேலும் இரும்பு வேலிகள், பேரிகேடுகள் உள்ளிட்டவற்றை வைத்து போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர்.

தொடர்ந்து அரியானா எல்லையில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டு விவசாயிகளின் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. தடுப்புகளை மீறி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்குள்ள நிலவரத்தை டிரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்