பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு மத்திய மந்திரி பதில் கடிதம்

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய மந்திரி பதில் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2024-08-30 13:21 GMT

புதுடெல்லி,

தமிழக அரசு உறுதி அளித்தபடி பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார். 

கடிதத்தில் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பதாவது:- "சமக்ரா சிக்சா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தை தமிழகம் செயல்படுத்தி வருவதால் கல்வி தரத்தை மேலும் உயர்த்த பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்பது அவசியம்.

குழந்தைகளின் கல்வி, எதிர்காலத்திற்கு அரசியல் கொள்கைகள் குறுக்கீடுகள் தடையாக இருக்கக்கூடாது. புதிய கல்விக் கொள்கையின் பலன்கள் நாடு முழுவதும் உள்ள மாணவர்களை சென்றடைய வேண்டும். பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையொப்பமிடுவதாக 15.03.2024-ல் தமிழகம் உறுதி அளித்திருந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசு உறுதி அளித்தபடி பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

தமிழ் மொழியுடன் பன்மொழிகளை மாணவர்கள் கற்பதை ஊக்குவிக்க மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சி எடுத்து வருகிறது. தமிழ் மொழியை மாணவர்கள் கற்க ஏதுவாக கடந்த ஜூலையில் தமிழ் சேனல் ஒன்று துவங்கப்பட்டது. சமக்ரா சிக்ஷா திட்டம் கல்வியை உலகளாவிய மயமாக்குவதற்கான மிகப்பெரிய மத்திய அரசின் திட்டமாகும்". இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

2024-25 நிதியாண்டில் சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி தொகையை விடுவிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியிருந்த கடிதத்துக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்