உத்தரபிரதேசத்தில் மாடி வீடு இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு

உத்தரபிரதேசத்தில் மாடி வீடு இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2024-09-15 07:16 GMT

மீரட்,

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஜாகீர் நகரில் 3 மாடிகளை கொண்ட வீடு ஒன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் 15 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

உடனடியாக  இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.. அதன் பேரில் உடனடியாக வந்த தீயணைப்பு துறையினர், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிந்தனர். இதனால் தற்போது பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்