குஜராத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு

குஜராத் மாநிலத்தில் ரிக்டர் 3.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update: 2025-01-01 07:04 GMT

காந்திநகர்,

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.24 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக குஜராத்தின் காந்திநகரை சார்ந்த நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட்ச் மாவட்டத்தின் பச்சாவு நகரத்திற்கு வடக்கு-வடகிழக்கிலிருந்து 23 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டில் டிசம்பர் மாதம் மட்டும் கட்ச் மாவட்டத்தில் 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல, கடந்த 2001 ஜனவரி 26ம் தேதி ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவான நிலநடுக்கத்தில் 13 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்