மராட்டியம், ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிப்பு

கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-15 10:44 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மராட்டிய சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற நவம்பர் 26-ந்தேதியும், ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஜனவரி 5-ந்தேதியும் முடிவடைய உள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் விரைவில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மற்றும் மராட்டிய மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மராட்டிய மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 20ம் தேதியும், மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக நவம்பர் 13 மற்றும் 20ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்படுகின்றன.

மராட்டிய மாநிலத்தில் 9.63 கோடி வாக்காளர்களும், ஜார்கண்டில் 2.6 கோடி வாக்காளர்களும் உள்ளனர். மேலும், இந்தியா முழுவதும் காலியாக உள்ள 47 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், வயநாடு மக்களவைத் தொகுதிக்கும் நவம்பர் 1-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்