வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update: 2024-10-25 22:58 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கோமலபுரத்தில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வருபவர் ஷம்புரங்கன் (வயது 31). இவர் வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்துள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் ஷம்புரங்கன் வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்ததை கண்டுபிடித்தனர். கஞ்சா செடி 189 சென்டிமீட்டர் உயரத்திற்கு வளர்ந்துள்ளது.

இதையடுத்து ஷம்புரங்கனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்