காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவமும், போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் படையினரை கண்டதும் முன்னறிவிப்பின்றி துப்பாக்கிகளால் சுட தொடங்கினார்கள். இதற்கு பதிலடியாக வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர்.;

Update: 2024-11-07 19:44 GMT

பாராமுல்லா,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தின் பானிப்புரா பகுதியில், சந்தேகத்திற்குரிய வகையிலான பயங்கரவாதிகளின் நடவடிக்கை பற்றிய தகவல் தெரிந்ததும் ராணுவமும், போலீசாரும் கூட்டாக இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

இதில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் படையினரை கண்டதும் முன்னறிவிப்பின்றி துப்பாக்கிகளால் சுட தொடங்கினார்கள். இதற்கு பதிலடியாக வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் அதிகாரித்து காணப்படுகின்றன. இதனால், பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் ஈடுபட்டு வருகின்றனர். குப்வாரா மாவட்டத்தின் லோலாப் நகரில் மார்கி பகுதியில் புதன்கிழமை காலை என்கவுன்டர் நடந்தது. இதேபோன்று, பந்திப்போரா மாவட்டத்தில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்