கர்நாடகா: சாலை விபத்தில் 5 பேர் பலி

கர்நாடகாவில் கரும்பு அறுவடை செய்யும் இயந்திரம் மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2024-12-06 17:07 GMT

பிஜப்பூர்,

கர்நாடகாவில் யாத்கீர் பகுதியில் இருந்து புறப்பட்ட 5 பேர் கார் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த கார் தளிகோடி தாலுகாவுக்கு உட்பட்ட பிலேபவி பகுதியருகே சென்றபோது, கரும்பு அறுவடை செய்யும் இயந்திரம் ஒன்றின் மீது மோதியது.

இந்த சம்பவத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்து விட்டனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கார் விபத்தில் உயிரிழந்த அனைவருடைய உடல்களையும் மீட்டு பாகேவதி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்